இவ்ளோ நாள் ஆகியும் ஏன் குழந்தை பெத்துக்கல? பிரச்சனை என்கிட்ட இல்ல உண்மையில்.. சூப்பர் சிங்கர் மாளவிகா வேதனை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தற்போது முன்னணி பாடகர்களாக உருவெடுத்துள்ளனர். அந்த வகையில், சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் மாளவிகா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாளவிகா, நிறைய பெயர் நான் ஏன் தாலி அணியவில்லை என்ற கேள்வி கேட்கிறார்கள். என்னுடைய அம்மா அதை பற்றி கேட்பார். ஆனால் என்னுடைய கணவர் அஸ்வின் ஒரு நாள் கூட தாலி போடு, பொட்டு வை என்றெல்லாம் சொன்னது இல்லை.
இந்த சமுதாயம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த கட்டமைப்பில் நாங்கள் இல்லை. திருமணமாகி ஒரு வருடத்திலேயே குழந்தை எங்கே என்று கேட்கிறார்கள். ஆனால் என் குடும்பத்தை அந்த மாதிரி கேட்பதில்லை.
அதுமட்டுமின்றி எப்போதுமே குழந்தை தொடர்பான கேள்விகளை பெண்களிடமே கேட்கப்படுகிறது. ஆனால் அது இரண்டு பேருமே சம்பந்தப்பட்டது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தக்கேள்வி ஏன் பெண்களிடமே வைக்கப்படுகிறது என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.