நான் ரெடி தான்!! சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீக்கு விரைவில் திருமணம்..மாப்பிள்ளைக்கு இந்த குணம் இருக்கணுமாம்....
சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.
சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.
விரைவில் திருமணம்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த பாவ்னி ரெட்டி - அமீர் திருமணத்திற்கு சென்றுள்ளார் நித்யஸ்ரீ. அங்கு அவர் அளித்த பேட்டியில், பாவ்னி என்னுடைய பெஸ்ட் ஃபிரெண்ட், நான் வரலன்னா கால் பண்ணி திட்டுவான்னு உடம்பு சரியில்லாமல் இருந்தும் அவளுக்காக வந்திருக்கிறேன்.
மேலும், நான் கல்யாணம் பண்ண ரெடி தான், என் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். என்ன குணம் இருக்கணும் என்று எதிர்ப்பார்ப்பும் இல்லை, லவ்வோடு, அக்கறையோடு இருக்கும் குணம் இருப்பவர் இருந்தால் போதும் என்று நித்யஸ்ரீ ஓப்பனாக பேசியுள்ளார்.