சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்-ஆ இது!! எங்க? யாரு கூட பாடி இருக்காங்கன்னு பாருங்க..
சூப்பர் சிங்கர் பூஜா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார். ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள், ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். பாட்டு பாடுவதை தாண்டி தற்போது நடனத்திலும் கவனம் செலுத்தும் பூஜா, சமீபகாலமாக நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த சத்யபாமா பல்கலைகழகத்தின் தலைவர் ஜேப்பியாரின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், தவெக தலைவரும் நடிகருமான விஜய் உள்ளிட்டவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
[இசைக்கச்சேரி]
திருமணத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் உள்ளிட்ட பல சூப்பர் சிங்கர் பிரபலங்கள் கலந்து கொண்டு பாட்டு பாடி அசத்தியுள்ளனர். தற்போது அங்கு கலந்து கொண்ட பூஜா வெங்கட் புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
