24 வயதான சூப்பர் சிங்கர் பிரகதியா இது? பாடகியாவதை விட்டுவிட்டு விளம்பரத்தில் குதிச்சிட்டாங்களே..
பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பல சினிமாவில் பாடகர்களாக பிரதிபளித்து வருகிறார்கள்.
அந்தவகையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் மலேசிய தமிழ் பெண் பிரகதி குருபிரசாத்.சூப்பர் சிங்கர் 3 சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்த பிரகதி நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் பாடியும் இருக்கிறார்.
கலிபோர்னியாவில் பெற்றோர்களுடன் வசித்து வரும் பிரகதி அங்கு நடைபெறும் கச்சேரிகளிலும் ஆல்பம் பாடல்களிலும் கலந்து கொண்டு வந்தார். பாடல்களை தவிர்த்து தற்போது மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு போட்டோஷூட் பக்கம் சென்றார்.
குட்டையான ஆடை க்ளாமர் லுக் என்று இணையத்தில் பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். சில மேக்கப் பிரடெக்ட்டுகளை விளம்பரம் செய்தும் காசு சம்பாதித்து வருகிறார். போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் பிரகதி விளம்பரத்திலும் சம்பாதித்து வருகிறார்.