சூப்பர் சிங்கர் பிரகதியா இது? வாய்ப்பில்லாமல் கடைசில இப்படியாகிட்டீங்களே
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் கண்டறியப்பட்டவர் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.
சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே நடிகர் அசோக் சிவனுடன் கிசுகிசுக்கப்பட்ட பிரகதி தற்போது பாடல்பாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்காக போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார்.
குட்டையாடை, பிகினி என ரசிகர்களை ஈர்த்து வந்த பிரகதி வெளிநாட்டு தோழிகளுடன் போட்டோஷூட் எடுக்க ஆரம்பித்தும் மேக்கப் போடும் வீடியோவை சமுகவலைத்தளத்தில் போட்டும் வருகிறார்.
தற்போது காலையில் எழுந்தது முதல் இரவு வரை தான் செய்யும் செயல் இதுதான் என்று ஒரு நாள் வாழ்க்கை செட்டாகும் என்றும் கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.