5 வருட காத்திருப்பு!! பெற்றோர் கொடுத்த வலி!! உருகிய பாடகி பிரியா ஜெர்சன்..
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 9ல் பங்கேற்று தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் பாடகி பிரியா ஜெர்சன்.
முதல் ரன்னர் அப் இடத்தை பெற்ற பிரியா, இனி நான் சிங்கிள் இல்லப்பா என்று கூறி திருமண அறிவிப்பை வெளியிட்டு விமரிசையாக கல்யாணத்தையும் முடித்தார்.

பிரியா ஜெர்சன்
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கில்லாடி ஜோடி என்ற நிகழ்ச்சியில் பிரியா ஜெர்சன் மற்றும் அவரது கணவர் ஜஸ்டின் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர் பேசுகையில், நான் இவரை காதலித்து திருமணம் செய்தது எங்க அப்பா அம்மாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் எங்கள் கல்யாணத்துகு அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று நான் கடைசி வரை காத்திருந்தேன்.
என் வாழ்க்கையில் ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் கல்யாணம் தான். ஆனால் அந்த நாள் எங்கள் அப்பா அம்மா வரவில்லை என்று தெரிஞ்சப்போது நான் முழுசாக சந்தோஷப்படவே முடியவில்லை. இப்போது இந்ந்நிகழ்ச்சியில் எங்கள் கல்யாண புகைப்படங்களை பார்க்கும்போது அந்த வருத்தம் மீண்டும் வருகிறது. இந்த எபிசோட்டை எப்படியும் எங்கள் அப்பா அம்மா பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அவர்களுக்கு ஒன்று சொல்லிவிடுகிறேன், என்னுடைய புருஷன் ரொம்ப நல்லவர், பார்க்குறதுக்கு தான் கொஞ்சம் ரகடு மாதிரி இருப்பாரு, ஆனா மனசு முழுக்க குழந்தை, இப்போ இந்த நிகழ்ச்சியில எங்க கல்யாண புகைப்படங்களை பார்க்கும்போது அந்த வருத்தம் மீண்டும் வருது.
இந்த ஷோ எப்படியும் எங்க அப்பா அம்மா பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன். அவங்களுக்கு ஒண்ணே ஒன்னு சொல்லிக்கிறேன்... என்னுடைய புருஷன் ரொம்ப நல்லவர்.
பார்க்குறதுக்கு தான் கொஞ்சம் ரகடு மாதிரி இருப்பாரு, ஆனா மனசு முழுக்க குழந்தை என்னுடைய மாமனார், மாமியார் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிறாங்க. அவங்களால்தான் நாங்க இங்க வர முடிஞ்சது. இந்த நிகழ்ச்சி முடியுறதுக்குள்ள, எங்க அப்பா அம்மாவும் எங்களோட சேரணும்னு தான் என் பெரிய ஆசை... என் கனவு என்று பேசியிருக்கிறார் பிரியா ஜெர்சன்.