சூப்பர் சிங்கர் பிரியங்காவா இது? டாக்டர், சிங்கரை தாண்டி இப்போ போட்டோஷூட் பக்கமா?

Super Singer Priyanka NK
By Jai Jun 21, 2022 04:10 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஜூனியரை வைத்து நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் பலர் பிரபலங்களாகி சினிமாவில் பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள்.

அப்படி பிரபலமானவர் சூப்பர் சிங்கர் பிரியங்கா என்கே. ஜூனியர் நிகழ்ச்சி கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார். அந்நிகழ்ச்சியில் அவர் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரியளவில் வெற்றியை பெற்றது.

இந்த பாடலை பாடியே கோடி ரூபாய் அளவிற்கு சம்பாதித்திருக்கிறார் என்று சமீபத்தில் அவரே கூறியிருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் பாடிய பிரியங்கா ஒரு பல் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது போட்டோஷூட் பக்கமும் சென்று புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.