சூப்பர் சிங்கர் ரக்ஷிதா சுரேஷை நியாபகம் இருக்கா!!! மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்..

Super Singer Star Vijay Tamil Singers
By Edward May 17, 2025 04:30 AM GMT
Report

சூப்பர் சிங்கர் ரக்ஷிதா

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 6ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தவர் தான் பாடகி ரக்ஷிதா சுரேஷ் கன்னட தொலைக்காட்சியில் லிட்டில் ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரக்ஷிதா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 3ல் கலந்து கொண்டார்.

சூப்பர் சிங்கர் ரக்ஷிதா சுரேஷை நியாபகம் இருக்கா!!! மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்.. | Super Singer Rakshita Suresh Recent Photos Post

அதன்பின் சூப்பர் சிங்கர் 6 சீசனில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து இளையரஜா, ஏஆர் ரஹ்மான், ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

சமீபத்தில் கூட அமரன் படத்தில் வெண்ணிலவு சாரல் நீ என்ற பாடலை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

புகைப்படங்கள்

சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சென்று இசையமைப்பாளர்களின் இசை கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி அசத்தி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரக்ஷிதா சுரேஷ், மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.