சூப்பர் சிங்கர் சீசன் 11 ஆரம்பம்!! இது புது கான்செப்ட்-ஆ இருக்கே..
சூப்பர் சிங்கர் சீசன் 11
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிறைவடைந்து சூப்பர் சிங்கர் பக்தி நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
விரைவில் இந்நிகழ்ச்சியும் நிறைவு பெறவுள்ள நிலையில், சூப்பர் சிங்கர் சீசன் 11ன் பிரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
புது கான்செப்ட்
20 போட்டியாளர்களுடன் தொடங்கப்போகும் இந்த புதிய சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்கள் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு சீசனிலும் சில வித்தியாசங்களை காட்டும் சூப்பர் சிங்கர் குழுவினர், சீசன் 11ல் தென் தமிழ், டெல்டா தமிழ், சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற புது கான்செப்ட்டில் ஆரம்பமாகவுள்ளது.
இதன் பிரமோ வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.