சூப்பர் சிங்கரை விட்டு போய்ட்டேனா? மாகாபா - பிரியங்கா எடுத்த அதிரடி முடிவு!! வீடியோ
பிரபல தொலைக்காட்சி சேனலில் பலர் தொகுப்பாளர்களாக பணியாற்றி வேறு ஒரு பாதையில் சென்றுவிடுகிறார்கள். அப்படி எங்களுக்கு இந்த வேலையே போதும் என்று கூறும் அளவிற்கு தங்கள் விஜே பணியினை சிறப்பாக செய்து வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா.
மாகாபா ஆனந்துடன் விஜே பிரபலங்கள் :-
பிரியங்கா டெஸ்பாண்டே விஜேவாக பணிக்கு வருவதற்கு முன்பில் இருந்தே மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். டிடி, சிவகார்த்திகேயன், கோபிநாத், பாவனா, ரம்யா, தியா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியும் இருக்கிறார் மாகாபா.
பிரியங்காவை நிகழ்ச்சிக்கு அறிமுகம் செய்து வைத்து இந்த நிலைக்கு கொண்டு வந்தவரும் மாகாபா தானாம். தற்போது வரையில் இருவரும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றும் இருந்து வருகிறது.
பிரியங்கா - மாகாபா விலகினார்களா :-
அப்படியிருக்கையில், சமீபத்தில் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்திகள் வெளியாகியது. இதேபோல் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நிகழ்ச்சியை தொடர்வார் என்று எதிர்ப்பார்த்தார்கள்.
ஆனால் நண்பர்களுடன் ஹைதராபாத் சென்றதால் அவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதனால், பிரியங்காவிற்கு பதில் மைனா நந்தினியையும், மாகாபா ஆனந்திற்கு பதில் தர்ஷன், குரோஷி போன்றவர்களையும் பயன்படுத்தி நிகழ்ச்சியை ஒளிப்பரப்பாக்கி வந்தனர்.
தற்போது மீண்டும் இருவரும் இணைந்து பல வாரங்கள் கழித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். சுற்றுலா எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் சூப்பர் சிங்கர் செட்டிற்கு பிரியங்கா வந்து விட்டார்.
மாகாபாவின் தாய்லாந்து டூர்:-
அதேபோல் சில வாரங்களில் மாகாபா தாய்லாந்திற்கு செல்லவுள்ளதால் சில வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாதாம். அங்கிருந்த வந்ததும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுடன் இணைந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. மற்றபடி இருவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை என தொலைக்காட்சி வட்டாரத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.
வரும் வாரம் ஞாயிற்று கிழமை ஒளிப்பரபாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபாவும் பிரியங்காவும் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏ ஆர் ரகுமான் வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.