நெல்சன் ஓகே அப்புறம்! மகான் டைரக்டர் பக்கம் ரூட்டை போட்ட சூப்பர் ஸ்டார்

vikram rajinikanth mahaan superstarrajini karthicksubburaj
By Edward Feb 11, 2022 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கும் நடிகர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அப்படி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து பிட்சா படத்தினை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றும் அதன்பின், ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட , ஜெகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார் கார்த்திக் சுப்புராஜ்.

அப்படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரமுக்கு கம்பேக் படமாக அமைந்த படம் மகான். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் நல்ல படங்களை பார்த்துவிட்டு இயக்குனர்களுக்கு கால் செய்து வாழ்த்து கூறி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சமீபத்தில் மாநாடு படத்தை பார்த்து வாழ்த்து கூறியதை போன்று கார்த்திக் சுப்புராஜ் படமான மகான் படத்தை பார்த்து வாழ்த்து கூறியுள்ளாராம். இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.