சோகத்தை வெளியில் காட்டாத சூப்பர் ஸ்டார்! தலைவர் 169 வேற வெவல்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு தலைவர் படத்தை யார் இயக்கப்போவது என்ற கேள்விகள் எழுந்தன.
அதற்கு ஏற்ப சூப்பர் ஸ்டாரும் பல இயக்குனர்களிடம் கதையை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியாகவுள்ளது. டாக்டர் படம் ரிலீஸாகாமலே விஜய் நெல்சன் இயக்கத்தில் ஒப்புக்கொண்டார்.
அதேபோல் சூப்பர் ஸ்டாரும் பீஸ்ட் படம் வெளியாகும் முன்பே நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரிப்ப்பில், அனிரூத் இசையில் தலைவர் 169 படம் எடுக்கப்படவுள்ளது.
படத்தின் அதிகார அறிவுப்பு வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பிளாக் ஸ்கீரினில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலாக உட்கார்ந்து சிரிப்பது போன்று காட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் மனதில் அதிக கஷ்டத்தை வைத்துக்கொண்டு சூப்பர் ஸ்டாரால் எப்படி இப்படி சிரித்து நடிக்க முடிகிறது என்றும் இதுதான் நடிப்பின் மேல் வைத்திருக்கும் அதீதி ஆர்வம் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.