விசாரிக்க விருப்பமில்லை!! ஜனநாயகன் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..

Vijay Supreme Court of India Madras High Court JanaNayagan
By Edward Jan 15, 2026 06:30 AM GMT
Report

ஜனநாயகன்

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன் படம். படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில், படத்தின் வழக்கை விசாரித்த பிடி ஆஷா, மறு ஆய்வுக்கு தடை விதித்தது.

விசாரிக்க விருப்பமில்லை!! ஜனநாயகன் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்.. | Supreme Court Snub Shocks Vijay S Jana Nayagan

உடனே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய, அந்த மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள் முருகன் அடங்கிய அமர்வில் தனி நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்ததுப்பின் ஜனநாயகன் குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

அதை பார்த்த தணிக்கை வாரியம், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

விசாரிக்க விருப்பமில்லை!! ஜனநாயகன் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்.. | Supreme Court Snub Shocks Vijay S Jana Nayagan

உச்ச நீதிமன்றம்

படக்குழுவினர் மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இன்று ஜனவரி 15 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில், காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெற்றது.

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 20 ஆம் தேதியே மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.