CSK- அணியில் பிளே பாயாக இருப்பவர் யார்!! உண்மையை உடைத்த குட்டி தல சுரேஷ் ரெய்னா..
MS Dhoni
Chennai Super Kings
Suresh Raina
Dwayne Bravo
By Jai
2024-ஆம் ஆண்டிற்காக இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை அணி கடைசியாக மும்பை அணியை வீழ்த்தி 3 ஆம் இடத்தினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சிஎஸ்கே அணி பற்றியும் எம் எஸ் தோனி பற்றிய வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரும் குட்டி தலயுமான சுரேஷ் ரெய்னா விஜே சித்துவின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்போது அவரிடன் சிஎஸ்கே அணியில் யார் சிறந்த பிளே பாயாக இருக்கிறார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சுரேஷ் ரெய்னா, அது டிவைன் பிராவோவிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் சிறந்த வேடிக்கையான நபர் யார் என்றால் அது எம் எஸ் தோனி தான். அவருக்கு அடுத்து முரளி விஜய் தான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருக்கிறார்.