இந்த குழந்தையா சூர்யாவுக்கு ஜோடி! தம்பி கார்த்தி படத்தில் நடிச்ச குட்டியாச்சே. வயசு என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அவரை போன்றே அவரது தம்பி கார்த்திக்கும் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் என்ற அந்தஷ்த்தை பெற்றார். அப்படி விருமன் படத்தில் நடித்துள்ள கார்த்திக் இப்படத்தில் வெளியிட்டிற்கு அடுத்தடுத்த படங்களின் ஷூட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
அதேபோல் சூர்யா, பாலா படத்தில் இரண்டாம் கட்டப்படப்பிடினை துவங்கவுள்ள நிலையில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையான கிர்த்தி செட்டி நடித்து வருகிறார்.
மீனவனாக நடித்து வரும் சூர்யாவுடன் பாதி படத்தினையும் முடித்துள்ளார் கிர்த்தி செட்டி. இந்நிலையில் கிர்த்தி செட்டி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்புகைப்படம் சூர்யா தம்பி கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தின் ஒரு காட்சியில் வருவார். அப்படி குழந்தையாக நடித்த குழந்தை தான் சூர்யாவுக்கு ஜோடியா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். தற்போது கிர்த்தி செட்டிக்கு 18 வயதாகிறது. சூர்யாவுக்கு கிரித்தி செட்டிக்கும் 18 வயது வித்தியாசமாம்.

