கதை திருட்டில் சிக்கிய நடிகர் சூர்யா.. தானாக முன் வந்த செய்த செயல்..
சூர்யா தயாரிப்பில் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். மிதுன், ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியான இப்படம் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்தது.
இப்படம் 2016ல் வெளிவந்த மராத்தி திரைப்படம் 'ரங்கா படாங்கா' படத்தின் கதையை அப்பட்டமாக காப்பியடித்து எடுக்கப்பட்டிருந்தது என கூறப்பட்டது. படம் வெளியாகி, விமர்சகர்களில் கதை திருட்டு விஷயத்தை எழுதிய பிறகே இந்த விஷயம் சூர்யாவின் கவனத்திற்கு சென்றுள்ளதாம்.
இதனால், கடும் கோபத்துக்கு ஆளான சூர்யா, இயக்குனர் அரிசில் மூர்த்தியை அழைத்து எச்சரித்துள்ளார்.அதோடு மராத்தி படத்தின் தயாரிப்பாளருக்கு காப்பி ரைட்டாக பெரும் தொகையும் அளித்துள்ளார். ஒரு கதை வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று அறிந்ததும், தானாக முன் வந்து நஷ்ட ஈடு கொடுப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர்.