மகேஷ் பாபு மீது செம கடுப்பில் சூர்யா ரசிகர்கள்! விக்ரம் படம் பார்த்து இப்படியா கூறினார்

Suriya Mahesh Babu
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

கடந்த மாதம் ரிலீஸ் ஆன விக்ரம் படம் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ட்விட்டரில் விக்ரம் படம் பற்றி வியந்து பேசி இருக்கிறார்.

விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பு சூப்பர், லோகேஷ் கனகராஜை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் என கூறிய அவர், கமல் நடிப்பு பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என்றும் கூறி இருந்தார்.

மகேஷ் பாபு மீது செம கடுப்பில் சூர்யா ரசிகர்கள்! விக்ரம் படம் பார்த்து இப்படியா கூறினார் | Suriya Fans Angry On Mahesh Babu

ஆனால் இந்த படத்தின் கிளைமாக்சில் ரோலக்ஸ்சாக வந்து மிரட்டிய நடிகர் சூர்யா பற்றி மகேஷ் பாபு ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை.

இது சூர்யா ரசிகர்களுக்கு செம கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கமெண்டில் கோபமாக மகேஷ் பாபுவிடம் இது பற்றி முறையிட்டு வருகின்றனர். 

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.