உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லை, சூர்யா ரசிகர்களிடம் கோபத்தை காட்டிய தயாரிப்பாளர் மனைவி

Suriya Siva (director) Kanguva
By Tony Sep 01, 2024 03:30 PM GMT
Report

சூர்யா ரசிகர்கள் இன்று முழுவதுமே கடும் கோபத்தில் தான் உள்ளனர்.

ஏனெனில் கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்த நிலையில், அன்றைய தினம் ரஜினி நடித்த வேட்டையன் வருவதாக அறிவித்துவிட்டனர்.

வார்த்தை மோதல்

இதனால் கங்குவா படம் தள்ளிப்போவதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் சூர்யாவும் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில், ரஜினி சார் மீது நான் பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்பது போல் பேச, கங்குவா கண்டிப்பாக தள்ளி போகும் என்றே முடிவு செய்துவிட்டனர்.

இதனால் மிக கடுமையாக சூர்யா ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை தாக்க, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் மனைவி, உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா? இப்படியெல்லாம் பேச என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இதோ..

உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லை, சூர்யா ரசிகர்களிடம் கோபத்தை காட்டிய தயாரிப்பாளர் மனைவி | Suriya Fans Fight With Production Team