ஜோக்கராக சூர்யாவை காட்டலாமா!! ரெட்ரோ-வால் கொந்தளித்த ரசிகர்கள்..

Suriya Pooja Hegde Karthik Subbaraj Retro
By Edward May 02, 2025 03:30 AM GMT
Report

ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று மே 1 ஆம் தேதி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது. ரெட்ரோ படத்தை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என்று டிவிட்டர் பக்கத்தில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஜோக்கராக சூர்யாவை காட்டலாமா!! ரெட்ரோ-வால் கொந்தளித்த ரசிகர்கள்.. | Suriya Fans Upset With Karthik Subbaraj Joker

ஜோக்கர்

ஏற்கனவே கங்குவா படத்தில் சூர்யாவை ராஜாவாக காட்டுகிறேன் என காட்டு கத்தாக கத்தும் காட்டானாக மாறியிருந்தார் சிறுத்தை சிவா. இதனால் கடுமையான கோபத்தில் படத்தை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

தற்போது ரெட்ரோ படத்தில் சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ், மூக்கில் ஜோக்கர் பந்தை எல்லாம் ஒட்ட வைத்து ஜோக்கராக்கிவிட்டாரே என்று ஆக்ரோஷமாக திட்டி வருகிறார்கள்.

மேலும், சூர்யாவை இயக்கி வரும் ஆர் ஜே பாலாஜி என்ன செய்யப்போகிறாரோ? என்ற ஆவலுடன் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.