சூர்யாவின் அட்டர் பிளாப் ET? 10 ஆண்டுக்கு பிறகு வெற்றிமாறனா? பாலாவா?

suriya bluesattaimaran jaibhim etharkum thuninthavan
By Edward Mar 27, 2022 12:45 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படங்கள் சூரரை போற்று, ஜெய் பீம். இவ்விரு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் வெளிவர பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்தார் நடிகர் சூர்யா.

குறித்த சாதியினரை சம்பந்தப்படுத்தி அவதூறாக சித்தரிக்கப்பட்டது என்று போலிசில் புகாரும் அளிக்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படம் 2 ஆண்டுகளுக்கு மேல் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

படம் சுமார் தான் என்று கூறும் அளவிற்கு பல விமர்சித்தும் வந்தனர். இந்நிலையில் அஜித் வலிமையை கலாய்ப்பதை நிறுத்திவிட்டு தற்போது யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சூர்யாவின் பக்கம் திரும்பியுள்ளார்.

சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா தரப்போகும் முதல் ஹிட் வெற்றிமாறனின் வாடிவாசலா அல்லது பாலா இயக்கத்தில் உருவாகும் படமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்ற பதிவினை போட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர் கடுமையான கருத்துக்களை கூறி ப்ளு சட்டை மாறனை கலாய்த்து வருகிறார்கள். அப்போ சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் அட்டர் பிளாப் படமா என்று நெட்டிசன்கள் கேலியும் செய்து வருகிறார்கள்.

நண்பருடன் ஆட்டம் போடும் விஜே பிரியங்கா! யார் பிரு இது என்று கேட்கும் ரசிகர்கள்..