காதலை எதிர்த்த சிவக்குமார்!! சூர்யா ஜோதிகா கல்யாணத்தை நடத்தியதே அவர் தான்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா, 2006ல் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல படங்களில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இதுபற்றி சூர்யா தந்தை சிவக்குமாரிடம் சொல்ல அவரும் எதிர்த்திருக்கிறார்.
அதனால் தந்தை ஏற்கும் வரை காத்திருக்கிறோம் என்று கூறியதால் 4 ஆண்டுகள் காத்திருந்தனர். அதன்பின் தான் சிவக்குமார் இருவரின் காதலை ஏற்று திருமணம் நடத்தி வைத்தனர்.
இதற்கான காரணத்தை கூட சித்ரா லட்சுமணன் பேட்டியில் சிவக்குமார் விவரித்திருப்பார். இந்நிலையில் சூர்யா - ஜோதிகா திருமணம் நடக்க பிரபல இயக்குனர் தான் காரணம் என்று பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் ஏற்காத சமயத்தில் சூர்யா இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வீட்டில் சில நாட்கள் தங்கினாராம். இதையறிந்த பின் சிவக்குமாரிடம் கெளதம் மேனன் சென்று சமாதானப்படுத்தி, சூர்யா - ஜோதிகா கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.