மும்பைக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா மற்றும் ஜோதிகா- இதோ அவர்களது வீடியோ
சூர்யா-ஜோதிகா
தமிழ் சினிமாவின் கியூட்டான ஜோடியாக கொண்டாடப்படுபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. கடந்த சில மாதங்களாக சூர்யா மும்பைக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார், அங்கு தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார் என நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.
விரைவில் சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நாயகன் விருது வாங்க இருக்கிறார்.
ஏற்கெனவே சூரரைப் போற்று படக்குழு டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது, சூர்யா எப்போது செல்வார் என தெரியவில்லை. விருதுடன் அவரின் புகைப்படத்தை காண ரசிகர்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
மும்பையில் சூர்யா குடும்பம்
தற்போது சூர்யா-ஜோதிகாவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. சூர்யா தனது குடும்பத்துடன் அண்மையில் மும்பை சென்றுள்ளார், அவர் ஏர்போர்ட் வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
National award winning actor @Suriya_offl and Jyothika spotted at Mumbai airport ?#VaadiVaasal #EtharkkumThunindhavan pic.twitter.com/kDQohKY8vi
— Suriya Fans Club ™ (@SuriyaFansClub) September 30, 2022