சூர்யா - ஜோதிகா மகள் தியா 12 ஆம் வகுப்பில் இவ்வளவு மதிப்பெண்ணா? இணையத்தில் வைரல்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 2006 ஆம் ஆண்டு தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிகை ஜோதிகா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்பத்தினை பார்த்து வந்தார்.
தியா என்ற மகளும் தேவ் என்ற மகளை பெற்றெடுத்த ஜோதிகா அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்திய நிலையில், 36 வயதினிலே, மகளிர் மட்டும் போன்ற படங்கள் மூலம் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். கிடைக்கும் நேரத்தில் மகள், மகனுடன் சூர்யாவும் ஜோதிகாவும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தியா 10 ஆம் வகுப்பில், தமிழில் 95, English 99, அறிவியல் 98, சமுக அறிவியலில் 95 மதிப்பெண்களை எடுத்துள்ளார். மேலும் அவர் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்களை எடுத்து அசதினார்.
தற்போது 12 ஆம் வகுப்பில் தியா எடுத்த மதிப்பெண் வெளியாகியுள்ளது. தமிழில் 96, ஆங்கிலத்தில் 97, கணக்கில் 94, பிசிக்ஸ் 99, கெமிஸ்ட்ரி 98, கம்யூட்டர் சயின்ஸ் 97 என மொத்தம் 600க்கு 581 மதிப்பெண் எடுத்து அசத்தி இருக்கிறார். அப்பா, அம்மாவை போன்று மகள் தியாவும் தன் குடும்பத்திற்கு பெருமையை சேர்த்திருக்கிறார்.
ஆனால், சூர்யா மகள் தியாவிற்கு தற்போது 16 வயதாகும் நிலையில் எப்படி 12 ஆம் வகுப்பு படிக்க முடியும் என்று இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இணையத்தில் கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே 10-ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியானது பொய்யான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/cefbe363-dd5c-44be-b4fc-c9c090168181/24-663877f2e76e5.webp)