திருட்டு படத்துக்கு இவ்வளவு பில்டப்பா? கதை விசயத்தில் சர்ச்சையில் விருமன் படம்..
கிராமத்து படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இயக்குனர் முத்தையா நடிகர் கார்த்தியை வைத்து கொம்பன் படத்திற்கு பிறகு விருமன் படத்தினை இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கரை அறிமுகப்படுத்தியும் இருக்கிறார்.
முதல் படமே அதிதி சங்கருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று படம் உலகம் எங்கும் வெளியாகவுள்ளது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வெளியாகும் நிலையில் கதை என்னுடையது என்று ஒரு இயக்குனர் புகாரளித்துள்ளாராம்.
என் கதையை திருடி முத்தையா வெளியிட்டுள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிதி சங்கர் பாடிய மதுர வீரன் பாடல் முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பாடிய பாடல்.
பின் அவரை மாற்றி அதிதியை பாடவைத்துள்ளார் யுவன் என்ற சர்ச்சை எழுந்து தற்போது முடிந்த நிலையில் கதை திருட்டு புகாரில் தற்போது கடைசி நேரத்தில் வந்துள்ளது.
ஏற்கனவே கொம்பன் படமும் என்னுடையது என்ற் கதை திருட்டு சம்பவத்தை சந்தித முத்தையா இந்த படத்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிடுவார் என்று பலர் கூறி வருகிறார்கள்.