கருப்பு திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ள லாபம்.. மாபெரும் சாதனை செய்த சூர்யா

Suriya Karuppu
By Karthick Raja Jun 11, 2026 11:00 AM GMT
Report

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கருப்பு.

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், ஷிவதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் மூலம் கிடைத்துள்ள லாபம்.. மாபெரும் சாதனை செய்த சூர்யா | Suriya Karuppu Movie Profit Details

கடந்த மே 15ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் வேட்டையாடி வருகிறது கருப்பு.

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் மூலம் ரூ. 80 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக லாபம் கொடுத்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.