தற்கொலை செய்யும் மாணவர்கள்! பொருக்க முடியாமல் வீடியோவை வெளியிட்ட நடிகர் சூர்யா..

students suriya tamilactress NEET NeetExam
By Jai Sep 18, 2021 07:31 AM GMT
Report

தமிழ் நாட்டில் தற்போது பெரிய விஷயமாக கருத்தில் கொண்டு பேசப்பட்டு வரும் செய்தி நீட் தேர்வு. அந்த தேர்வால் பல மாணவர்களின் கனவும் மரணங்களும் நிகழ்ந்து வருவதை கண்டித்து பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தவரிசையில், முன்னணி நடிகர் சூர்யா ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

அதில், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று ஆரம்பித்து, ஒரு பரீட்ச உங்களோட உயிரை விட பெருசில்ல. தற்கொலை உங்கள ரொம்ப புடிச்சங்களுக்கு நீங்க கொடுக்குற வாழ்நாள் தண்டனை. கஷ்டம் என்றால் அவர்களிடம் சென்று பேசுங்கள். நானும் பல தோல்விகளை கண்டிருக்கிறேன்.

மதிப்பெண் தேர்வு மட்டுமே வாழ்க்கையல்ல, சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.