தங்குவதற்கு ஹோட்டல் இல்லாமல் நடுரோட்டுக்கு வந்த பாலா சூர்யா? படக்குழு எடுத்த அதிரடி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்கு பிறகு அடுத்த படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் சென்னை ECR பகுதியில் நடைபெற்றது. இப்படம் இப்படி சென்று கொண்டிருக்கும் போதே நடிகர் சூர்யா இயக்குனர் பாலா கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்துள்ளது.
சூர்யா41 என பெயரிடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாக்குமரி கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு, மீனவம் தொடர்பான கதையாக இயக்குனர் பாலா எடுத்து வருகிறார்.
படப்பிடிப்பு கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருவதால், ஷூட்டிங் நடக்கும் பகுதிக்கு பக்கத்தில் எங்கும் பெரிய ஓட்டல் இல்லையாம். இதனால் வெகுதொலைவில் சென்று வரமுடியாது.
இதனால் கடற்கரை ஒட்டியே 4 வீடு சொந்தமாகவே கட்டி வருகிறார்களாம். ஓட்டல் காசு கொடுப்பதற்கு பதில் இந்த முடிவை எடுத்த சூர்யா - பாலா ஷூட்டிங் முடிந்த பின் அந்த வீட்டினை மீனவர்களுக்கு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.