47 வயதாகியும் திருமணமாகாத நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு!! அதிர்ச்சியில் சினிமாத்துறை
முன்னாள் பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்று பாலிவுட் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சுஷ்மிதா சென். தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தும் முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் போட்டும் இருந்தார்.

பின் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தற்போது 46 வயதில் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
பல நட்சத்திரங்களுடன் டேட்டிங் சென்று சர்ச்சை நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் லலித் மோடியுடன் டேட்டிங் சென்றும் திருமணம் பற்றி இப்போதைக்கு என்னமில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதற்கான ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டெண்ட் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனக்கு பலமான இதயம் இருப்பதாக என்னுடைய இருதயநோய் நிபுணர் மீண்டும் எனக்கு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தோடு இந்த பதிவினை போட்டுள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.