திருமணம் செய்ய ஆசைதான் ஆனா...47 வயதில் சிங்கிளாக இருக்கும் நடிகை சுஷ்மிதா சென்..
சுஷ்மிதா சென்
மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை ப்ற்று 1997ல் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவான ரட்சகன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட்டில் பல படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுஷ்மிதா ஆரம்பத்தில் இருந்தே பலருடம் காதலில் இருந்தும் கிசுகிசுவில் சிக்கியும் வந்தார்.
49 வயதாகியும் இரு பெண் பிள்ளைகளை தத்தெடுத்து திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ரோஹ்மன் என்ற தன்னை விட வயது குறைவான இளைஞருடன் நெருங்கி பழகி திருமணம் வரை சென்றார்.
அதன்பின் இருவரின் காதல் முடிவுக்கு வந்து சிங்கிளாக மாறினார். சில ஆண்டுகளுக்கு முன் லலித் மோடியுடன் டேட்டிங் சென்று பின் அதிலிருந்தும் விலகினார்.
திருமணம் செய்துக்கொள்ள விருப்பம்
இந்நிலையில் திருமணம் பற்றி நடிகை சுஷ்மிதா சென் பகிர்ந்துள்ளார். அதில், எனக்கும் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தான், ஆனால் திருமணத்திற்கு தகுதியான நபர் கிடைக்க வேண்டும் இல்லையா?.
திருமணம் அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. அது இதயத்தின் பிணைப்பு, என்பதால் அந்த உணர்வு இதயத்தை நெருங்கவேண்டும். அப்படியொரு உணர்வு நெருங்கும் பட்சத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பேசியுள்ளார்.