விஜய் மாதிரி கொடநாடு கேட்டில் அவர் நிற்கவில்லை!! எஸ்.வி.சேகர் விமர்சனம்..
எஸ் வி சேகர்
நடிகரும் அரசியல் விமர்சகருமான எஸ் வி சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய்யை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். அதில், முதல்வர் ஜெயலலிதா இருந்த மேடையிலேயே, சொடக்கு போட்டு, இனிமேல் இந்த தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி சொன்னார்.

அஜித் அப்போதைய முதல்வரான கருணாநிதி முன்பே, எங்களை நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி மிரட்டுகிறார்கள் என்று கூறினார். இவர்கள் கொடநாட்டு குளிரில் கைகளைக் கட்டிக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று பிச்சைக்காரர் மாதிரி கேட்கவில்லை என்று எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த தவெக கூட்டத்தில், ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபல தலைவராக வரவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்து அரசியல் சிஸ்டத்தை மாற்றவும் நினைத்தார்.

எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நினைத்தவரை இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவர் அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
இப்போது அவருடைய நிலை என்ன? கடைசியில் அவர்கள் குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களில் நடிக்க போய்விட்டார், அவர் மேல் விமர்சனம் கிடையாது, ஆனால் அரசியலில் அந்த மனவலிமை நம் விஜய்யிடம் இருக்கு என்பதை பதிவி செய்த ஆதவ் அர்ஜுனா பேசியதை கண்டித்து தான் எஸ் வி சேகர் விமர்சித்துள்ளார்.