திருமணமாகி 2 வருடத்தில் விவாகரத்து, தற்கொலை எண்ணம்!! 20 ஆண்டு கழித்து நடிகை ஸ்வர்ணமால்யா ஓப்பன் டாக்.
90-ஸ் கிட்ஸின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் ஸ்வர்ணமால்யா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதன்பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே ஷாலினிக்கு அக்காவாக நடித்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார். மேலும் இவர் எங்கள் அண்ணா, மொழி, எங்க என்ன சொல்லுது, புலிவால் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஸ்வர்ணமால்யா கடந்த 2002 ஆம் ஆண்டு அர்ஜுன் ராஜாராமன் என்பவரை குடும்பத்தினர் பார்த்து வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அமெரிக்காவில் செட்டிலாகி இரு ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஸ்வர்ணமால்யா, பரதம் சம்மந்தமான அரங்கேற்றம் செய்தும் வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திருமணம், விவாகரத்து, அதன்பின் தொடரும் வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். சீரியல் நடிக்கும் போது ஒரு நாளைக்கே பல காதல் லட்டர்ஸ் வரும். இரத்தத்தில் கூட லட்டர் எழுதி அனுப்புவார்கள். ஒருவர் என்னை கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஒருவர் எழுதிய கடிதம் நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை விமர்சிப்பவர்களை கண்டுக்கொள்ளாமல் போய்விடுவேன். நான் கல்யாணம் பண்ண யோசிக்க நேரமில்லை.
21 வயதில் என் பெற்றோர்கள் என்னை பார்த்துக்கொள்பவர் என்று கூறி கல்யாணம் செய்து வைத்தார்கள். அந்த வயதில் ஒரு புகைப்படத்தை பார்த்து எப்படி பிடித்திருக்கும். பின் கல்யாணம் செய்யப்போகும் கணவர் குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். எல்லாராலையும் கையாள முடியாது தான். பின், விவாகரத்தை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு, ஒரு கல்யாணம் நடந்தது, சரியில்லை, அதிலிருந்து வெளியில் வந்துட்டோம் அவ்வளவு தான். அதிர்ச்சியாக என் குடும்பத்துக்கு இருந்தது.
என் வாழ்க்கையில் நடந்த எல்லாமே சமுகத்திற்கு தெரியும், அது நல்லது, கெட்டதாக இருந்தாலும் வெளியில் தெரிந்து, அவர்களும் கருத்து சொல்வார்கள். ஆனால், எனக்கு கிடைத்தவர்கள் சிறந்தவர்கள். எதற்காகவும் வாழ்க்கை நிற்காதே, போய் படி என்று சொன்னார்கள். விவாகரத்து காரணம் என் வயதாக கூட இருக்கலாம்.
எனக்கு 21, அவருக்கு 25. இத்தனை வருஷம் கழித்து என்ன காரணம் இருந்தது, இதனால் அதனால் என்று கூறமுடியாது. இரண்டு பேருக்கிட்டயும் பிரச்சனை இருந்திருக்கலாம். இது எதுவும் பெற்றோருக்கு தெரியாது என்று விவாகரத்துக்கு காரணம் என்ன என்று 20 ஆண்டுகள் கழித்து நடிகை ஸ்வர்ணமால்யா ஓப்பனாக கூறியிருக்கிறார்.
நான் 20 ஆண்டுகளுக்கு முன் தற்கொலைக்கு முயன்றேன் என்ற செய்தி அப்போது பரபரப்பானது. எனக்கு பலரிடம் இருந்து கால் வந்தது. எனக்கு அந்த எண்ணம் வந்தது. அதனால் என் அக்கா, மனநல மருத்துவம் எந்தளவிற்கு தேவை என்று என்னை மருத்துவரிடம் கூட்டிச்சென்றார். தற்கொலை எண்ணம் வந்தாலே, அதை செய்வார்கள் என்று நினைத்துவிடுவார்கள். அந்த வார்த்தை வரும் போதே சிகிச்சை பெற்றேன்.
பெரிய சண்டையெல்லாம் கிடையாது, ரொம்பநாள் இருக்கும் மன அழுத்தம் தான் அதற்கு காரணம். கண்ணையே திறக்க பிடிக்காத சூழலில், அழுகை, இதன்பின் வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலைக்கு வந்ததால் தான் மனநல மருத்துவரை சந்தித்தேன்
அதன்பின் மதம், சாதி தாண்டி ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். ஒரு முடிவில் என் பெற்றோர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பார்ட்னர்ஷிப் தான் என்று நினைக்கிறேன்