விஜய்க்கு ஜோடி!! சூட்டிங்கில் நடிகையின் கன்னத்தில் பளார்விட்ட எஸ் ஏ சந்திரசேகர்
நடிகை ஸ்வாதி
தமிழில் 1995ல் வெளியான தேவா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை ஸ்வாதி கிரண். இப்படத்தினை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கினார். விஜய், சிவக்குமார், மனோரமா உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஸ்வாதி, 8 வது மற்றும் 9வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
மாடலிங் செய்திருந்த ஸ்வாதியின் புகைப்படத்தை பார்த்து எஸ் ஏ சி, அவர் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். முதலின் போனை எடுத்த ஸ்வாதியின் அம்மா, தன் மகள் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று கூறி போனை கட் செய்துள்ளார்.
ஆனாலும் எஸ் ஏ சி-யின் ஆபிஸிலிருந்து தொடர்ந்து போன் செய்து கேட்டிருக்கிறார்கள். விடாமல் போன் வருவதை பார்த்த ஸ்வாதியின் அப்பா, உனக்கு தான் தமிழ் தெரியுமே, சும்மா போயிட்டு வாங்க, படத்துக்கு முதலில் அவங்க நம் மகளை தேர்வு செய்யணும்ல, ஸ்வாதியை எஸ் ஏ சாந்திரசேகர் நிச்சயம் தேர்வு செய்யமாட்டார் என்று நினைத்து கூறியிருக்கிறார்.
பள்ளி கோடை விடுமுறை வரவே, மகளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் ஸ்வாதி அம்மா. எஸ் ஏ சந்திரசேகர் விட்டில் போட்டோஷூட் நடந்தபோது, ஒருவர் வந்து ஸ்வாதியின் மீது கைபோட, அவர் யாரென்று திரும்பிப்பார்த்தபோது, அங்கு நடிகர் விஜய் நின்றிருக்கிறார். போட்டோஷூட் முடிந்தப்பின், நீங்க தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறீர்கள் என்று ஸ்வாதியிடம் கூறியிருக்கிறார்கள்.
அப்போது உச்சத்தில் இருந்த ஒரு நடிகை நடிப்பதாக இருந்து, அது நடக்காமல் போகவே ஸ்வாதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்கூல் லீவு என்பதால், தேவா படத்தில் நடிக்கட்டும் என்று ஸ்வாதியின் அப்பா சம்மதம் சொல்லியிருக்கிறார். தேவா, வசந்தவாசல், செல்வா போன்ற படங்களில் நடித்த ஸ்வாதி, அஜித்துடனும் ஜோடியாக நடித்தார்.
பளார்விட்ட எஸ் ஏ சந்திரசேகர்
சமீபத்தில் ஸ்வாதி அளித்த பேட்டியில், பள்ளிப்பிள்ளை என்பதால், சிவக்குமார் சார் அடிக்கும் காட்சியில் அழ வேண்டும். ஆனால் சிவக்குமார் நிஜமாக அறையாமல் லேசாக தட்டினார். ஸ்கூல் கேர்ளான எனக்கு அதனால் அழவரவில்லை. ரீடேக் போய்க்கொண்டே இருந்தது.
கண்ணீர் வராததால் எஸ் ஏ சந்திரசேகர், விறுவிறுவென்று வந்து என் கன்னத்தை சேர்த்து ஓங்கு ஒரு அறைவிட்டார். அந்த வலியால் நா அழுவிட டேக் ஓகே ஆகிவிட்டது. எஸ் ஏ சந்திரசேகர் கைவிரல் என் கன்னத்தில் அப்படியே பதிந்துவிட்டது. ஸ்பாட்டில் எல்லார் முன்பும் டைரக்டரிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது.
அதனால் யாருடனும் பேசாமல் அமைந்தியாக இருந்தேன். பின் விஜய்யின் அம்மா, எஸ் ஏ சந்திரசேகரிடம், சின்ன பொண்ணு, புதுப்பொண்ணு, அதைப்போய் அடிச்சீட்டீங்களே என்று கேட்டார். பின் எஸ் ஏ சந்திரசேகர் என்னிட வந்து சமாதானம் செய்தார் என்று ஸ்வாதி தெரிவித்துள்ளார்.