கல்யாணமான 2வது மாசமே துரோகம் செய்தார்!! சாஹலின் முன்னாள் மனைவி ஓபன் டாக்..
யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ வர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வந்தவர் தான் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2020ல் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்த நிலையில் திருமணமாகி 4 வருடத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில் தனுஸ்ரீ சினிமா மற்றும் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இந்தி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் தனுஸ்ரீ வர்மா, சாஹல் உடன் திருமணம் உறவு பற்றி பகிர்ந்துள்ளார்.
துரோகம் செய்தார்
அதில், சாஹலுடன் திருமணம் முடிந்து ஒராண்டுக்குள்ளாகவே இந்த உறவு நீடிக்காது, நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்ந்துவிட்டேன். சாஹல் என்னை ஏமாற்றுகிறார் என்பதை திருமணமான 2 மாதத்திலேயே கண்டுபிடித்தேன்.
ஆனால் ஒரு திருமண உறவு நீடிக்க வேண்டுமென்றால், அதற்காக நாமும் கொஞ்சம் உழைப்பை கொடுக்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு விஷயத்தின் போதும் சாஹலுக்காக நின்றேன். அதனை அனைவரும் பார்த்தனர்.
சிறிய விஷயமாக இருந்தாலும், பெரிய விஷயமாக இருந்தாலும் அவருக்காக நின்றிருக்கிறேன். அதனால் தான் சாஹல் உடனான உறவு முடிவுக்கு வந்தப்பின் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டதாக தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.