போட்டோஷூட்டுக்கு வீட்டுக்கு அழைத்த அப்பா!! நடிகையின் தோளில் விஜய் செய்த செயல்..

Vijay Swathi S. A. Chandrasekhar Tamil Actress Actress
By Jai Apr 26, 2026 11:00 AM GMT
Report

நடிகை சுவாதி

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை சுவாதி. விஜய், அஜித் படங்களில் நடித்து சுவாதி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆரம்பகால அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

போட்டோஷூட்டுக்கு வீட்டுக்கு அழைத்த அப்பா!! நடிகையின் தோளில் விஜய் செய்த செயல்.. | Swathi Reveals Funny First Meeting With Vijay

அதில், தேவா படத்தை இயக்கிய எஸ் ஏ சந்திரசேகர் வீட்டிலேயே ஹீரோ - ஹீரோயின் போட்டோஷூட் நடத்த திட்டமிட்டு இருந்தார். அதற்காக நான் சென்றிருந்தேன். அப்போது கேமராமேன், இப்படி நின்று கொள்ளுங்கள், அப்படி போஸ் கொடுங்கள் என்று சொல்ல அதற்கு நானும் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் திடீரென ஒருவர் அங்கு வந்து, என் தோளில் கை வைத்தார். யார் என்று தெரியாமல் பார்த்து நான் குழம்பினேன். பின், இவர்தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னதும் தான் அவர் விஜய் என்று எனக்கு தெரியும்.

போட்டோஷூட்டுக்கு வீட்டுக்கு அழைத்த அப்பா!! நடிகையின் தோளில் விஜய் செய்த செயல்.. | Swathi Reveals Funny First Meeting With Vijay

அப்போது எனக்கு பெரிய நடிகர்கள் என்றால் ரஜினி, கமல் போன்றவர்கள் தான் தெரியும், விஜய் யார் என்று தெரியவில்லை, பின்புதான் அவர் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்று சொன்னார்கள் என்று சிவாதி தெரிவித்துள்ளார்.