அம்மா இருக்கும் போதே படுக்கையறையை பகிர கேட்ட நடிகர்!! கதறிய சீரியல் நடிகை சுவாதி சர்மா..
வெள்ளித்திரையானாலும் சரி, சின்னத்திரையானாலும் சரி, நடிகைகள் வாய்ப்பு தேடி சென்றால் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்திக்காமல் வந்திருக்க முடியாது. அந்தவகையில் சமீபகாலமாக நடிகைகள் பலர் தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்ததை பற்றி வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
அப்படி ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை சுவாதி சர்மா. கன்னட சீரியலில் இருந்து தமிழில் அறிமுகமாகிய சுவாதி சர்மா தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மெண்ட் சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
மாடலிங் முடித்துவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட என் அம்மாவுடன் சென்றிருந்தேன். ஒரு இடத்தில் வாய்ப்புக்காக சென்ற போது ஒரு நபர் என் அம்மா முன்பே அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கேட்டார். இதனால் அம்மா கோபப்பட்டார்.
உடனே அந்த நபரை கடுமையாக திட்டி அங்கிருந்து வெளியில் வந்துவிட்டோம். பின் அம்மா என்னிடம், அப்பவே நடிப்பு வேண்டாம்ன்னு சொன்னேன், நான் இருக்கும் போது இப்படி என்றால் நான் இல்லாத போது என்ன நடந்திருக்கும் என்று கோபப்பட்டு கட்டியதாக சுவாதி சர்மா கூறியிருக்கிறார்.
அதன்பின் அம்மாவை சமாதானப்படுத்தி நினைத்தாலே இனிக்கும் சீரியல் கிடைத்தது. அந்த சீரியல் ஷூட்டிங்கிற்காக சென்னை வர தான் ரொம்ப பயப்பட்டதாகவும் சுவாதி சர்மா பேட்டியில் பகிர்ந்துள்ளார்.