என் கால் மேல் ஏறி நில்..ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை!! நடிகை நெகிழ்ச்சி..

Udhayanidhi Stalin Serials Tamil Actress Actress
By Edward Mar 20, 2026 12:15 PM GMT
Report

நடிகரும் தற்போதைய தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய உதயநிதி, நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் போன்ற படங்களுக்கு பின் நடிப்பை விட்டுவிட்டார். இந்நிலையில் நடிகை ஸ்வேதா டோரதி, இப்படை வெல்லும் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

என் கால் மேல் ஏறி நில்..ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை!! நடிகை நெகிழ்ச்சி.. | Swetha Dorathy Reveals Udhayanidhi Kind Gesture

ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி

அதில், நான் முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் சாரை இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் பார்த்தேன். அப்போது ராதிகா மேடம் கூட இருந்தார்கள். நான் முதலில் உதயநிதி சாரோட தங்கச்சியா நடிக்கிறதாக இருந்தது. அவருக்கு ஜோடியாக மஞ்சுமா நடித்திருந்தார்.

அப்போது என்னை பார்த்ததும், அவர் இவங்க எனக்கு தங்கச்சியாக இருக்கிறதைவிட மஞ்சுமா மோகனின் தங்கச்சியா நடிச்சா சரியா இருக்கு. இவங்க ரெண்டு பேருடைய முகமும் ஒரே போல இருக்கு என்று சொன்னார்.

என் கால் மேல் ஏறி நில்..ஷூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை!! நடிகை நெகிழ்ச்சி.. | Swetha Dorathy Reveals Udhayanidhi Kind Gesture

அதன்பின் ஒருநாள் கோவில் மேல்பகுதியில் கலசத்திற்கு அருகில் ஒரு காட்சி எடுக்கப்பட்டபோது, கடும்வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நின்றது மிகவும் சிரமமாக இருந்தது.

அப்போது நான் காலை வெயிலில் வைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை கவனித்த உதயநிதி ஸ்டாலின், என் காலின் மேல் ஏறி நில் என்று சொன்னார். முதலில் தயங்கினேன், பின் வெயில் தாங்க முடியாததால் அந்த உதவியை ஏற்றுக்கொண்டதாக ஸ்வேதா டோரதி தெரிவித்துள்ளார்.