அந்த மாறி பொண்ணு தான் திருமணம் செய்வேன்.. ஆசைப்பட்ட நயன்தாராவின் முன்னாள் காதலன்

Silambarasan Hansika Motwani Nayanthara
By Dhiviyarajan Feb 01, 2023 03:44 PM GMT
Report

சிம்பு

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தவர் தான் சிம்பு. கடந்த ஆண்டு இவர் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது சிம்பு 'பத்து தல' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

முன்னாள் காதலிகள்   

சில வருடங்களுக்கு முன்பு சிம்புவும் நயன்தாராவும் காதலித்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட  பிரச்சினையால் பிரிந்தனர். இதன் பின் சிம்பு நடிகை ஹன்சிகாவை காதலித்தார். இவர்களுது காதலும் தோல்வியில் முடிந்தது. கடந்த ஆண்டு நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஹன்சிகா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

சிம்பு ஆசைப்படுகிறார்

இந்நிலையில் சிம்பு காதலித்து வந்த போது இதை குறித்து டி. ராஜேந்தர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், " சிம்பு காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைப்பது ஒன்றும் தவறில்லை. அவர் சினிமா துறை சார்ந்தவராக இருப்பதால் அதே துறையை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்" என்று கூறியுள்ளார்.