சூப்பர் சிங்கரில் மனைவியை நினைத்து எமோஷ்னலாகிய சிம்புவின் தந்தை.. வைரலாகும் வீடியோ..

Silambarasan TRajendar Super Singer Pathu Thala
By Edward Apr 10, 2023 10:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் டி ராஜேந்தர். அவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் எஸ் டி ஆர் என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சூப்பர் சிங்கரில் மனைவியை நினைத்து எமோஷ்னலாகிய சிம்புவின் தந்தை.. வைரலாகும் வீடியோ.. | T Rajendar Emotionl Speech About Wife Son Simbu

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் கலந்து கொண்டு மனைவி மற்றும் பிள்ளைகளை பற்றி எமோஷ்னலாக பேசி அழுதிருக்கிறார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது மனைவி எப்படி பார்த்துக்கொண்டார் என்றும் பிள்ளை கவனித்து கொண்டது பற்றியும் பகிர்ந்துள்ளார்.

மேலும் என் மகனுக்கு நான் பெண் பார்க்க மாட்டேன். பல என்னிடம் என் பெண்ணை கட்டிவை என்று கேட்டு வந்த நட்பே முறிந்துபோய் விட்டது.

ஆனால், என் பையனுக்கு பிடித்தால், சாதி, மதம், மொழி, இனம் எல்லாமே பார்க்க மாட்டேன், இதயத்தை மட்டும் தான் பார்ப்பேன்.

என் பையனுக்கு பெண் பார்ப்பதை நிறுத்தியே விட்டுவிட்டேன் என்று கண்ணீருடம் பேசியிருக்கிறார்.