ரஜினி அந்த படத்தை நிராகரிக்க இதான் காரணம்!! டி ராஜேந்தர் ஓபன் டாக்..
டி ராஜேந்தர்
இயக்குநர், நடிகர் என பன்முகத்திறமையை கொண்டு தமிழ் சினிமாவின் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தவர் தான் டி ராஜேந்தர். உயிருள்ளவரை உஷா படம் வெளியாகி 42 ஆண்டுகளான நிலையில் அப்படத்தினை டிராஜேந்தர் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்.
அதற்காக நீண்ட இடைவெளிக்குப்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உயிருள்ளவரை உஷா படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
உயிருள்ளவரை உஷா - ரஜினி
அதில், ரஜினி மாதிரி ஒரு பண்பான மனிதரை பார்க்கமுடியாது. ஒரு தலை ராகம் படத்தில் இருந்து நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். என்னுடைய ‘ரயில் பயணங்களில்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சிகரம் கே பாலந்தர் பாராட்டியதை போன்று ரஜினியும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார்.
பின் இந்த காம்பினேஷனில் என்னுடைய வசனத்தில் ஒரு படம் செய்யலாம் என்று ரஜினி சொன்னார். பின் என்னுடைய தேதிகள் இப்போது இல்லை, நான் உங்களுக்கு கெஸ்ட் ரோல் செய்து தருகிறேன் என்று கூறினார்.
நானும் உயிருள்ளவரை உஷா படத்தின் கதையை தயார் செய்துவிட்டு டப்பிங் ஸ்டுடியோவில் சந்தித்து சொன்னேன். அதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட, என்னை கட்டிப்பிடித்து, இந்த படத்தை நிச்சயமாக செய்யலாம் என்று சொன்னார். அதன்பின் அதில் வேறொரு விஷயம் தான் தடையாக வந்தது. பெரிய தயாரிப்பு நிறுவனத்தை வைத்து படத்தை தயாரிக்கலாம் என்று ரஜினி சொன்னார்.
நிராகரிக்க இதான் காரணம்
அப்போது நான், என்னுடைய படத்தை நானே சொந்தமாக ரிலீஸ் செய்ததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. எந்தப்பெரிய நிறுவனத்திற்கு சென்றாலும் எனக்கும் அதே சம்பளம் தான் கிடைக்கும், ஆனால் இப்போது அந்த சம்பலம் போதாது. நஷ்டத்தை ஈடு செய்ய நானே படத்தை தயாரிக்க வேண்டும் என்றேன்.
அதற்கு ரஜினி, நீங்களும் நானும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ், நம் நட்பு முறைந்துவிடக்கூடாது, நான் பெரிய நிறுபனத்தில் மட்டும்தான் படம் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள்? என்று கேட்டார். எனக்காக அவருடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளக்கூடாது என்பதற்காக அப்போது அது நடக்கவில்லை.
உயிருள்ளவரை நிஷா படத்தின் செயின் ஜெயபால் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தால் அது வேறுமாதிரியாக இருந்திருக்கும், பின் நான் சில மாற்றங்களை செய்து நடித்தேன், இதுதான் உண்மை என்று டி ராஜேந்தர் பல ஆண்டு ரகசியத்தை கூறியுள்ளார். சமீபத்தில் ரஜினிகாந்தின் கூலி படத்தின் Chikitu பாடலுக்கு பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.