40 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் பையன்!! விரக்தியில் பேரனை வைத்து பக்கா பிளான் போட்ட டி ராஜேந்தர்..
தமிழ் சினிமாவ்ல் 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் டி ராஜேந்தர். தன் மகன் சிலம்பரசனை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்கி பின் கதாநாயகனாகவும் வளர்த்துவிட்டார்.
சினிமாவை நம்பியே அப்பாவும் மகனும் அடுத்தடுத்த படங்களில் வேலை பார்த்து வந்தனர். இதற்கிடையில் சிம்பு வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த பின் மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய இடத்தினை பெற்று தந்தது.
ஆனால் சிம்பு இன்றுவரை 40 வயதை தாண்டிய நிலையிலும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். சிம்புவின் தம்பி, தங்கைகளுக்கு திருமணம் முடித்து வைத்த டி ராஜேந்தர், சிம்புவின் விருப்பப்படி தான் திருமணம் நடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தன் பேரனுக்காக ஒரு கதையை இயக்கி வரும் டி ராஜேந்தர் விரைவில் அந்த கதையை படமாக்கவும் தயாராகி இருக்கிறாராம். இதற்காக செட் போடும் வேலைகளை ஆரம்பித்துள்ள டி ராஜேந்தர், தன் பேரனுக்காக உழைத்து வருகிறாராம்.