அந்தமாதிரி படமா? விஜய்சேதுபதி படத்தால் ஓட்டம் பிடிக்கும் நடிகை..

taapsee vijaysethupathi anabelsethupathi
By Edward Oct 13, 2021 06:34 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த படம் ஆடுகளம். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை டாப்ஸி. இப்படத்திற்கு பிறகு நல்ல வரவேற்பு பெற்று தமிழ் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பாலிவுட் பக்கம் சென்று கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பினார்.

அதுவும் விஜய் சேதுபதி படத்தில். இயக்குனர் தீபக் செளந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான அனபெல் சேதுபதி படத்தில் தான் டாப்ஸி ரீ என்ட்ரி கொடுத்தார். அனபெல் சேதுபதி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் பேய் படத்திலேயே நடிக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்படத்தின் இயக்குனர் எனக்கு கதையை எடுத்துச் சொல்லி இது ஒரு பேண்டஸி படம் என்றார். அதனால் தான் சம்மதித்தேன்.

நான் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கதையை தேர்வு செய்வதில்லை. இதே கதையை பாலிவுட்டில் கூறி இருந்தாலும் நடித்திருப்பேன். கடந்த ஆறு ஆண்டுகளாக, நான் ஒரு ரசிகையாக இருந்தே படங்களை தேர்வு செய்தேன். ஆனால் இனி பேய் படங்களில் நடிக்க போவதில்லை. இப்படத்தின் தோல்வியாக இனி இந்த பக்கமும் தலை வைக்க போவதில்லை என்று கூறப்படுகிறதாம்.