அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து இப்படியொரு பொழப்பு தேவையில்லை! சினிமாவை தூக்கி போட்ட நடிகை கூறிய காரணம்?

Taapsee Pannu
By Edward Jun 10, 2022 08:33 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படம் ஆடுகளம். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றவர் டாப்சி பன்னு. இப்படத்தினை அடுத்து ஆரம்பம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்தார்.

பின் பாலிவுட்டில் பிங்க் படத்தில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார். இதையடுத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தையும் பிடித்து விளையாட்டு ஜாம்பவான்களின் வாழ்க்கை வரலாற்று படத்தினை கையில் எடுத்து நடித்து வந்தார்.

சமீபத்தில் அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தன் தங்கையுடன் இணந்து ஆரம்பித்தார். சமந்தா நடிக்கவுள்ள பெயரிடப்படாத படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில் தான் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் பெரும்பாலும் வாய்ப்புக்காக செல்லும் பிரபலங்கள் அட்ஜெஸ்மெண்ட் செய்யவே பலர் கூறுவதாகவும் கூறியுள்ளார்.

சினிமாவில் நடித்து அதிகமாக சம்பாதித்து விட்டேன். இனிமேல் நடிக்க போவதில்லை. தயாரிப்பில் முழு வீச்சில் கவனம் செலுத்த போவதாகவும் கூறியுள்ளார். பணம் கிடைக்கும் போது இதுபோன்ற குறையை கூறாமால் தற்போது மட்டும் ஏன் இந்த முடிவை கூறிகிறார் என்று பலர் கேள்வி கேட்டும் வருகிறார்கள்.