அம்பானி திருமணத்திற்கு செல்லாத காரணம் இது தான்.. டாப்ஸி கொடுத்த பதில்!!
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த "ஆடுகளம்" படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தார்.
அதற்குப் பிறகு "வந்தான் வென்றான்," "ஆரம்பம்," மற்றும் "காஞ்சன 3" போன்ற படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த கடைசி படம் "அனபெல் சேதுபதி" ஆகும், ஆனால் இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். ஆனால் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் டாப்ஸி அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக பேசிய நடிகை டாப்ஸி, அம்பானி குடும்பத்தை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது.
திருமணங்கள் என்பது அந்தக் குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே தனியான உறவு இருக்க வேண்டும். அப்படி தொடர்பு இருந்தால் தான் அந்த திருமணத்திற்கு செல்வன். அது தான் என்னுடைய விருப்பம் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
