நடிகை தபு 51 வயதில் திருமணமாகாமல் இருக்க இந்த நடிகையின் கணவர் தான் காரணம்!

actress tabu ajaydevgn
By Edward Nov 09, 2021 08:15 AM GMT
Report

இந்தி திரையுலகில் தற்போது வரை பிஸியான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தபு. 51 வயதிலும் க்ளாமர் நடிகர்களுடன் நெருக்கம் என பிஸியாக இருந்து வருகிறார் தபு. 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என கொடிக்கட்டி பறந்து வந்தார்.

இடையில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவுடன் காதலில் இருப்பதாக அன்றைய இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை மறுத்து வந்த தபு இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இதற்கு காரணம் என்ன என்று பலர் கேட்டு வந்த நிலையில் தபு உண்மையை சமீபத்தில் கூறியுள்ளார். நான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க காரணம் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தான் காரணம்.

என் சகோதரனும் அஜய் தேவ்கனும் நெருங்கிய நண்பர்கள். நான் எங்கு சென்றாலும் என்னை சுற்றுக்கொண்டிருப்பார். ஆண்களுடன் பேசினால் அவர்களை மிரட்டி சண்டையிருவார். அப்படியிருக்கையில் நடிகை கஜோலை திருமணம் செய்து கொண்டார். இதனால் தான் நான் திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அஜய் தேவ்கன் என்ன கூறுவார் என்று அவரளிக்கும் பேட்டியில் தான் தெரியவரும்.