நடிகர் விஜய்யின் தங்கை தற்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வைரலாகும் வீடியோ
ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் மாபெரும் நடிகர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. மேலும் இதுவே அவருடைய கடைசி படமாகும்.
அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால், சினிமாவில் இருந்து விலக விஜய் முடிவு செய்துள்ளார். அண்மையில் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் தங்கை
நடிகர் விஜய்யின் உடன் பிறந்த தங்கை வித்யா தனது சிறு வயதிலேயே உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய மறைவு விஜய்யை பெரும் அளவில் பாதித்தது. சுக்ரன் படத்தில் கூட விஜய்யின் தங்கை வித்யாவின் புகைப்படத்தை காட்டியிருப்பார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மறைந்த தங்கை வித்யா தற்போது உயிருடன் இருந்தால் எப்படி இருப்பார் என்பதை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..