கல்யாணம் செய்யாமல் குழந்தை பெற விரும்பும் பிரபல நடிகை
Tabu
By Parthiban.A
தமிழில் காதல் தேசம் படத்தில் நடித்தவர் தபு. அவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அந்த காலத்தில் பல இளைஞர்களின் கனவுகன்னியாகவும் இருந்தவர் அவர்.
தபு 50 வயதை கடந்தும் தற்போது வரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அவர் தற்போது அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு குழந்தை பெற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்காக திருமணம் எல்லாம் செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருக்கிறார்.
நான் திருமணம் செய்யாமலேயே தாய் ஆக முடியும், வாடகை தாய் வைத்து குழந்தை பெற்று கொள்வேன் என கூறி இருக்கிறார் அவர்.

