பணத்துக்காக இப்படி நடிக்க ஆரம்பித்த நடிகை தமன்னா.. அதுக்குனு இதெல்லாம் ரொம்ப ஓவர்
salary
tamanna
By Kathick
கோலிவுட் முதல் பாலிவுட் வரை ரசிகர்களை கவர்ந்த முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை தமன்னா. 32 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை தமன்னா, படங்களிலும் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்திருந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் திரையுலகில் கிடைத்தது. இதனால், தொடர்ந்து இதை போன்ற திரில்லர் கதைக்களத்தில் அமையும் வெப் சீரிஸில் நடிக்க தமன்னா முடிவெடுத்துள்ளாராம்.
ஏனென்றால், படங்களை விட வெப் சீரிஸில் சம்பளம் அதிகம் என்றும், நடிக்கும் நேரமும் கம்மி என்றும் கருதி வெப் சீரிஸில் கவனத்தை செலுத்தி வருகிறாராம் தமன்னா. பணத்துக்காக மட்டுமே தமன்னா எடுத்துள்ள இந்த முடிவு அவரின் ரசிகர்களை செம கடுப்பாக்கி உள்ளது.