விராட் கோலியை காதலித்தாரா தமன்னா..? நடிகை கொடுத்த விளக்கம்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இருவரும் திடீரென பிரேக் அப் செய்துவிட்டனர்.
காதல் முறிவுக்கு பின் ஜிம் ஒர்க் அவுட்டில் கவனம் செலுத்தி தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இந்த நிலையில், நடிகை தமன்னா குறித்து வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
பல வருடங்களுக்கு முன் தமன்னா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. அது பற்றி தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார் தமன்னா.
"இப்படி கிசுகிசு வருவதை பார்த்து எனக்கு சோகமாக இருந்தது. நான் விராட் கோலியை ஒரு முறை மட்டுமே ஷூட்டிங்கில் பார்த்தேன்.அதன் பிறகு அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை. அவரிடம் பேசவும் இல்லை" என தமன்னா கூறி இருக்கிறார். இதன்மூலம் வந்தந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.