கேரவனில் நடிகை தமன்னாவிற்கு எற்பட்ட சோகம்.. கண்ணீருடன்..
தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கியவர்களில் ஒருவர் நடிகை தமன்னா.
தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மாறி மாறி கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துக்கொண்டு வருகிறார். காவாலா காவாலா, அச்சச்சோ, Aaji Ki Raat போன்ற ஹிட் பாடல்கள் மூலம் சமீப காலமாக மக்கள் கவனத்தில் இருந்த வண்ணம் உள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை தமன்னா, தனக்கு கேரவனில் நடந்த ஒரு சோகமான விஷயம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், நான் என் கேரவனில் இருக்கும்போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. அதனால் மிகவும் மனம் உடைந்த என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியாது.
அப்போது நான் என்னிடம் இது ஒரு உணர்ச்சி மட்டும் தான். அதை நான் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். இது எனக்கு மிகவும் உதவியது என கூறியுள்ளார்.