அஜித்-க்கு ஓகே சொல்லி விஜய்யை பகைத்துக் கொண்ட மில்ஸ் மியூட்டி!! வாயால் கெட்ட நடிகை தமன்னா..
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை தமன்னா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த தமன்னா தற்போது இந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர்களுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்கவும் வைத்து வருகிறார். மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கதாநாயகியாக நடித்தும் இருக்கும் தமன்னா காவாலா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து பிரமோஷனுக்காக பேட்டியும் அளித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா ஜெயிலர் படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் விடா முயற்சி படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது என்ற செய்தி வெளியானது.
இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய்யின் 68வது படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னாவிடம் தான் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமன்னா ஜெயிலர் படத்தின் பேட்டியொன்றில் விஜய்யின் சுறா படத்தில் நடித்த ரோல் எனக்கு பிடிக்கவில்லை, அந்த படத்தில் ஏன் நடித்தேன் என்றும் இனிமேல் அப்படி நடக்கவே மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இப்படி தமன்னா கூறியதால் விஜய் கோபத்துக்கு ஆளாகி இருக்கலாம். அதனால் தளபதி 68 படத்தின் வாய்ப்பை இழக்கலாம் என்று மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். விஜய் அமலாக்கத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்றும் நடிகர் ஜெய் தம்பியாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.